பக்கம்:பாடகி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மிகவும் நன்றி சுவாமி. அதில் நிறையப் பணம் வைத் திருந்தேன். நல்ல வேளையாக உங்களிடம் கிடைத்தது. வேறு யாரிடமாவது கிடைத்திருந்தால் எதுவும் எனக்குக் கிடைத் திருக்காது.” என்றார் மேஜர் காசிநாத்.

“நான் விடைபெறட்டுமா?’கனிவாகக் கேட்டார் டேவிட்.

“நல்லதும் கெட்டதும் மாறி மாறித் தான் வருகின்றன. சற்று முன்பு எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது என் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து நீங்கள் வந்து என் பையைக் கொடுத்தீர்கள். எனக்குக் கொஞ்சம் இதமாக இருக்கிறது. காபி அருந்தி விட்டுப் போகலாமே!”

போகலாம், ஆனால் இந்த வீட்டில் நீங்கள் தானே எல்லா வேலைகளையுமே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. தங்களைத் தவிர வேறு யா ைர யு மே காணவில்லையே!- பாதிரி துளாவினர்.

‘உண்மைதான். இந்த மாளிகையில் நான் தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். ஒரு பொருளே இடம் மாற்றுவதென்றால் கூட நான் தான் எழுந்து போய்ச் செய்ய வேண்டும். தளர்ந்த குரலில் பதில் சொன்னர். r

‘உங்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? இதோ பட்டம் பெற்ற ஒரு பெண்மணியின் படம் இருக்கிறதே, அது யார்?’. என்று ஏறிட்டுப் பார்த்து திகிலடைந்தார். அதுவா, அது என் மகள் நாச்சியார். அவள்தான் இன்றைக்கு என்னைப் ஆ நாக மாக வந்து தீண்டிக் கொண்டிருக்கிருள். நீங்கள் எல்லாவற் றையும் துறந்து இளமையிலேயே சாமியாராகி விட்டீர்கள். நான் அப்படி இருக்க முடியுமா? ஒரு மனிதனுடைய இதயத்தில் கவலே மட்டும் குடி கொண்டு விட்டால், அது பெரிய ஆல மரத்தில் பொந்து விழுந்த மாதிரித்தானே!” என்றார் மேஜர்.

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/107&oldid=698896" இலிருந்து மீள்விக்கப்பட்டது