பக்கம்:பாடகி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கவலைகள் எல்லோருக்கும் உண்டு. சிலருக்கு, தேவைகளே கவலைகளாகலாம்; இன்னும் சிலருக்கு தோல்விகளே கவலைக ளாகலாம். கவலையில்லாத மனிதன் ஏது? -

‘நியாயம் தான். ஆனல் எனக்கு ஏற்பட்டிருக்கும் கவலை மாதிரி உங்களுக்கு ஏற்பட வழி இல்லை. இதோ பாருங்கள் என் மருமகன் எழுதியிருக்கிறார் கடிதம். என் தலை சுற்றுகிறது சாமி.’

டேவிட் கடிதத்தை எடுத்துப் படிக்கிரு.ர்.

‘இந்தக் கடிதத்தில் காரணமே சொல்லப்படவில்லையே! காரணமில்லாமல் விவாகரத்து எப்படிச் செய்வது? திக்ைப் புடன் கேட்டார்.பாதிரி.

“நான் வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வேலை பார்த் தவன். அவன் ஒரு நா ைய ச் சுடுவதென்றாலும் அதற்குக் காரணம் சொல்லுவான். இப்போது அப்படியா நடக்கிறது” மேஜர் கண்கலங்கச் சொன்னர்.

“மேஜர், நீங்கள் மனத்தை இழந்து விடக் கூடாது. முழு விவரம் அறிந்து எனக்கு தகவல் கொடுங்கள். மற்றவர்களுக்கு உழைக்கவே கர்த்தர் எங்களைப் படைத்திருக்கிறார்,” என்று சொல்லி விடைப் பெற்றுச் சென்றார். -

மூலஸ்தானம் டேவிட்டின் உள்ளத்தில் பழைய எண் ண ங் க ள் அலை மோதின.

“எனக்குத் துரோகம் செய்ததற்கான பலனை அவள் அனுபவிக்கிருள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/108&oldid=698897" இலிருந்து மீள்விக்கப்பட்டது