பக்கம்:பாடகி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இல்லை; அவள் உத்தமி; அவள் மீது எந்தத் தவறும் இருந் திருக்காது. மயில்வாகனன் பணத்திமிரில் ஏதாவது தொல் ஆல

கொடுத்திருப்பான்.”

பாதிரியின் உள்ளத்தில் இந்த மனப் போராட்டம் முடி வில்லாமலே நிகழ்ந்து கொண்டிருந்தது.

இடையிடையே பெரு மூச்சு விட்டுக் கொண்டான்.

டேவிட் கருணையானந்தத்திற்குக் குழப்பம் தீரவில்லை. மீண்டும் பழைய நி னே வு க ள் அவனேப் பின்னுக்கிழத்துச் சென்றன. ஒரு பேராசிரியனுக, மனேவி மக்களோடு வாழ வேண்டிய நான், இன்று கடவுளின் சன்னிதானமே வாழ்வின் புகலிடம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். அதைப் போல, புருஷன், பிள்ளைகள் என்று வாழ வேண்டிய நாச்சியார் இன்று எல்லோராலும் கை விடப்பட்டு நடுத் தெருவுக்கு வந்து விடப் போகிருள். ரோஜாக் கொல்லே மண் வளத்தைப் பொறுத்தே பலன் தருகிறது. சில பேர் சேற்றில் நட்டு விட்டு நல்ல ரோஜா பட்டுப் போய் விட்டதே என்கிறார்கள். அது போலத் தான் பெண்களின் வாழ்க்கையும் பெண்ணின் வாழ்க்கை அவளு டைய அழகில் இல்லே, ஆடை ஆ ப ர ண ங் களி ல் இல்லை; புருஷனைப் பொறுத்துத் தான் அமைகிறது. பாவம், எங்கோ, எப்படியோ வாழ வேண்டியவள் எங்கோ எப்படியோ அலை மோதுகிருள். *: w

டேவிட்டின் சிந்தனை ஓயவில்லை. தபால்காரன் ஒரு கடி தத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். அது பெங்களூரில் இருந்து கோகிலா எழுதிய கடிதம். அவள் அதில்,

‘அன்புள்ள அண் ண ன் அவர்களுக்கு, வணக்கம். மிக முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேச தங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நெடு நாட்களுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது மாதிரியும் இருக்கும்.”

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/109&oldid=698898" இலிருந்து மீள்விக்கப்பட்டது