பக்கம்:பாடகி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போவது!’ -பாதிரி இப்படிச் சொன்னதும், கோகிலா திகில டைந்துவிட்டாள். மயில்வாகனன் சந்தேகப்பட்டது உண்மை தான? என்று கூட எடுத்த எடுப்பில் கோகிலா நினைத்து விட்டாள். பிறகு, டேவிட் விளக்கமாகச் சொன்ன பிறகுதான் மனஅமைதி ஏற்பட்டது.

‘மயில்வாகனன் உடனே வி வா. க ர த் து செய்துவிட வேண்டும் என்கிருரே!”

செய்துவிட்டு?

“ஏற்கனவே, இதே நாச்சியார், தான் பிழைக்க மாட்டோம் என்று தீர்மானித்து ஒரு பியான வாத்தியக்காரியை அவனுக்கு மனம் முடித்து வைத்திருக்கிருளே, அவளுக்குத்தான் இப்போது கொண்டாட்டம் ஆகிவிட்டது” என்றாள்.

“ அவசரக்காரர்களிடத்திலும், அற்பத்தனமானவர்களி டத்திலும் வெற்றி நீண்ட காலம் நிலைத்ததில்லை. கோகிலா என் தொண்டு தெய்வத் தொண்டு. தெய்வத் தொண்டுக்கு இலக்கணமே. பிறருக்கு உழைப்பது, பிறருக்கு உதவுவது, நிர பராதிகளைக் காப்பதுதான். நான் இதை ஒரு அறைகூவலாக எடுத்துக் கொள்கிறேன். எப்படியும், நாச்சியாரை மயில்வாகன ளுேடு சேர்த்துவைக்க வேண்டும். அதுதானே உன் இலட்சியம்’ ஆழ்ந்த சிந்தனையோடு பேசினன் டேவிட்.

“என் இலட்சியம் மட்டுமல்ல; உங்களுடைய இந்தப் புனிதமான கோலத்திற்கும் அதுதானே அழகு என்றாள் கோகில்ா. - - -

- இந்த நேரத்தில் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து

மயில்வாகனன் இறங்கி வந்தான்.

வாசலில் டேவிட்டைப் பார்த்ததும் அவன் முகம் கருத்து

விட்டது. பாதிரி உடையில் முதன் முதலாக அப்போதுதான்

பார்க்கிருன்.

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/111&oldid=698901" இலிருந்து மீள்விக்கப்பட்டது