பக்கம்:பாடகி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மிஸ்டர் மயில்வாகனன், உங்கள் சந்தேகத்தை நிவர்த் திக்கத்தான் வந்திருக்கிறேன். கோகிலா கடிதம் எழுதியிருந் தாள். நீங்கள் என்னோடு மனம் விட்டுப் பேசலாம். என்னிடத் தில் எந்த மாசும் இல்லை. நான் பத்தாண்டுகளுக்குப் பின் நாச் சி யா ைர ப் பார்த்தது கூட இல்லை. என் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டது. இனி அதை மாற்றவே முடியாது அவள் என்னை ஏமாற்றவில்லை; தந்தை செய்த குற்றத்திற்காக தன் காதலை தியாகம் செய்தாள். அவளாக என்ன விட்டுப்பிரிய நினைத்தாள். அதை நான் தடுக்க முடியுமா?-பாதிரி அமைதி யாகப் பேசினர். -

“உங்களோடு நான் வாதாடவரவில்லை. டாக்டர் கோகிலா விடம் விடை பெற்றுப் போக வந்தேன். வீண் விவகாரம் வேண்டாம்.”

“இதுவா விண் விவகாரம். இது உன் மனைவியைப் பற்றிய விஷயமாக மட்டும் இருந்தால் நான் தலையிட மாட்டேன். எங்கோ இருக்கும் என்னேயும் இழுத்துப் போட்டுப் பேசப்பட்ட விஷயம், நான் இன்று தனி மனிதனல்ல. நான் ஒரு நிறுவனம். என்னைக் கலங்கப்படுத்த நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். அதைப் பற்றித்தான் நான் பேசவேண்டும்.”

“உங்களுக்கும், நாச்சியாருக்கும் சம்பந்தமில்லாவிட்டால் நீங்கள் இந்தக் கட்டத்தில் இங்கு வரக் காரணம் 67676T? இது வரை, நாடகம் எது வரை போயிருக்கிறது என்பதை அறிவதற் காகத்தானே!”-துடுக்காகப் பேசினன் மயில்வாகனன்.

‘உன்னைப்போலவே நானும் பாதிக்கப்பட்டவன். ஆகை யால் உன்னைப்போலவே நானும் எடுத்தெரிந்து பேசிவிடலாம் ஆனால் அணிந்திருக்கும் உடைக்கு அது அழகாகாது.”

“அந்த உடைதான் உடம்பை இப்போது காப்பாற்றியிருக் கிறது. இல்லாவிட்டால் நடப்பதே வேறு மீண்டும் இரைத் தான் மயில்வாகனன்.

III

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/112&oldid=698902" இலிருந்து மீள்விக்கப்பட்டது