பக்கம்:பாடகி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையில் கோகிலா குறுக்கிட்டாள். ‘மிஸ்டர் மயில் வாகனன், நீங்களாகத்தான் என் வீடு தேடி வந்தீர்கள், வைத் தியம் பார்த்தோம்; சாராவையும் நானேதான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இதற்கும் எங்கள் அண்ண னுக்கும் என்ன சம்பந்தம்?”

‘உங்களிடம் வந்ததால் வந்த வினைதானே இது! இங்கு வராவிட்டால் அவள் இறந்திருப்பாள்; நிம்மதியாக இருந்திருப் பேன்.” மயில்வாகனனின் தொனியில் தொய்வு ஏற்படவே இல்லை.

“இவ்வளவு பேசுகிறீர்களே, மயில்வாகனன், உங்களுக்கு மனசாட்சி இருந்திருந்தால் மனைவி படுத்த படுக்கையாக இருந்தபோது சாரர்வோடு கொஞ்சி மகிழ்ந்திருப்பீர்களா?” கோகிலாவின் கேள்வி வேலாகப் பாய்ந்தது.

‘டாக்டர் மிதமிஞ்சிப்பேசாதீர்கள்’

பேச வேண்டிய கட்டம் வந்துவிட்டால் எல்லாவற்றையும் உடைத்துத்தானே பேச வேண்டும்! ஒன்றும் நாச்சியாருக்குத் தெரியாமலில்லை. எல்லாம் தெரிந்து தான் அவள் தெய்வமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிருள்! அவளுடைய பாவம் உங்களை விடப்போவதில்லை கோகிலா வார்த்தைகளைக் கொட்டினள்.

‘கோகிலா, நீ பேச வேண்டாம். இது எனக்கும் அவருக் கும் உள்ள விஷயம். நான் இப்போது தும்பைப் பூவாக இருக் கிறேன். ஆனால் அவர் என்னை பழைய கதைகளோடு ஒட்டிப் பார்க்கிரு.ர். ஆனல் அவருக்கு உண்மையை உணர்த்தியே ஆக வேண்டும். இதில் நான் தயக்கம் காட்டினல் என் உடைக்கும் அழகல்ல, என் தொண்டுக்கும் பெருமை அல்ல. ஒரு வேண்டு கோள் விடுக்கிறேன். இன்று அவர் கோபத்தில் பேசுகிரு.ர். ஆகையால் உணர்வுகள் நிதானமாக இருக்க மாட்டா. எப்போ தாவது ஒரு நாளே க் கு நாச்சியார் நிரபராதி என்று தெரிந்து

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/113&oldid=698903" இலிருந்து மீள்விக்கப்பட்டது