பக்கம்:பாடகி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டால் அப்போதாவது அவளே ஏற்றுக் கொள்வாரா என்பதை மட்டும் நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றார் பாதிரி.

“அதுவரை இருக்கவா போகிருள். அவள் அடக்கமான வளாக இரு ந் த லு ம் மானமுள்ளவள்”-கோகிலா குறுக் கிட்டாள்!

‘இருந்துதான் ஆக வேண்டும் கோகிலா! குற்றம் சாட்டப் பட்டவர்களெல்லாம் இ ற ந் து போ ய் விட்டால் பொது மக்கக்ளுக்கு எப்போதுதான் உண்மை தெரிவது” பாதிரியர் இடையிட்டுப் பேசினர்!

மயில்வாகனன் பலமாகச் சிரித்தான்! அது ஏளனச் சிரிப் புத்தான்!

“அவள் இறந்து விட்டாலே நிரபராதிதான் அவள் இறப்ப தற்காகவா என்னே மோசம் செய்திருக்கிருள். எப்டிடியாவது வாழ்வதற்காகத்தானே நாடகம் ஆடி இருக்கிருள். மானமிருந் தால் அவள் அன்றைக்கே விஷம் குடித்து இறந்திருப்பாளே! அவளாவது இறப்பதாவது!” என்று இகழ்ச்சியாகப் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டுப்போய் விட்டான் மயில்வாகனன்.

இரண்டு வாரங்களுக்குப் பிற கு மல்லீஸ்வரம் சாலையில் ஒரு அழகிய பெண்ணின் பிரேதம் அடையாளம் தெரியாமல் அழுகிப் போய்க் கிடட்பதாக ந க ரி ல் பரபரப்பு ஏற்பட்டது. உடனே டாக்டர் கோகிலா போலீசுக்கு தொலைபேசி மூலம் கேட்டாள். அதற்கு அவர்கள் அத்தப் பெண்ணின் மடியில் ஒரு கடிதம் இருந்தது. அதில் நான் வி ஷ ம் குடித்து இறந்து போய் விட்டேன். உத்தமியாக வாழ்ந்த என்னே, கணவனுக்காக எதையும் தியாகம் செய்து வாழ்ந்த என்னே என் கணவர்

113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/114&oldid=698904" இலிருந்து மீள்விக்கப்பட்டது