பக்கம்:பாடகி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தேகித்ததால் நான் நஞ்சு குடித்து விட்டேன். நான் இறந்த திலைாவது அவர் என்னைப் பற்றிய மு டி ைவ மாற்றிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான் நான் இ ந் த முடிவுக்கு வந்தேன். இப்படிக்கு, நாச்சியார் எ ன்று எழுதியிருப்பதாக விவரமாகச் சொன்னர்கள். கோகிலாவுக்கு உடல் புல்லரித்தது. இந்தத் தகவலைச் சொல்லியாவது, ம யி ல் வாகனனத் திருத் தலாம் என்று கோகிலா அங்கு புறப்பட்டாள்.

அவள் எதிர்பார்க்கவில்லை. மயில்வாகனனுக்கும் செய்தி எட்டி அவன் கண்ணிரோடு நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். கோகிலாவுடன் முகம் கொடுத்துப் பேசவே அவனுக்கு வெட்க மாக இருந்தது. - .

கொடுமை நடந்து வி ட் ட து டாக்டர். அவள் நோயாளி யாகவே இறந்திருக்கலாம். அவளேக் குணப்படுத்திக் கொன்று விட்டேன். மகரந்தம் நிறைந்த மலராக அவள் என்னிடம் வந்தாள். ஆனல் நானே அவளைக் குப்பைக் கூளமாக்கி விட்டேன். செல்லப் பிள் ளே க ளு க்கு சுய சிந்தனை இருக்காது என்பது உண்மையாகி விட்டது. டா க் டர், பாதிரி கருணை யானந்தத்திற்கு என் மன்னிப்பைத் .ெ த ரி வி க் க வேண்டும். எனக்காகவாவது அவர் இறைவனைப் பிரார்த்திக் கட்டும்; வாழ்க்கையின் வெற்றிக்கு பண ம ல் ல முக்கிய காரணம், ப்ண்பும் குணமும்தான் மிக முக்கியமான மூலதனங்கள்” 3. என்று புலம்பினன். கோகிலாவும் கண்ணிரைச் சொரிந்தாள். அப்போது தெருவில் ஒரு பாட்டுச் சத்தம் கேட்டது.

“டாக்டர், இந்த ராகம் எ ன் ரு ல் நாச்சியாருக்கு உயிர். கல்யாண மேடையில் இருக்கும்போது இந்த இராகத்தை நாத சுரக்காரர்கள் வாசித்தார்கள். இது ஆ ன ந் த பைரவி ராகம் அவளுக்காக இதே ராகத்தில் பல இசைத் தட்டுக்களை வாங்கி வைத்தேன். இன்று அவளி ல் லாமல் நான் மட்டும் அந்த ராகத்தைக் கேட்கிறேன். கணவனுக்கும் மனைவிக்கும் சேர்த்துப் படிப்பதுதான்ே நலுங்கு. அந்த நலுங்குப் பாடலே நான் மட்டும் ரசிக்கமுடியுமா டாக்டர். மயில் வாகனன் பைத்தியம் பிடித்

II4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/115&oldid=698905" இலிருந்து மீள்விக்கப்பட்டது