பக்கம்:பாடகி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவனைப்போல் பேசினன். முதலில் கோகிலா பயந்து விட்டாள், பிறகு தேற்ற முயன்றாள்.

‘சாரா எங்கே’’?

‘அந்தக் கொடுமையைக் கேட்காதீர்கள். அவள் நாடகத் திற்குப் போயிருக்கிருள்’ என்றான் மயில்வாகனன்.

பெங்களூரில் பாதிரியார் விடுதியில் தங்கியிருந்த டேவிட் கருணையானந்தத்தை வரவழைத்து, டாக்டர் கோகிலா விவர மாகச் சொன்னுள். அவர் கலங்கவில்லை. ‘இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு ஒ ர ள வு தெரியும்” என்று மட்டும் சொன்ஞர் டேவிட் கோகிலா திகைப்படைந்தாள்.

‘'நீ ஆச்சரியப்படுவாய் ேகா கி லா, இந்த ஏற்பாட்டை நான் தான் செய்தேன். மானமுள்ளவளானல் அவள் சாகட்டும் என்று அ வ ன் சொன்னதுமே எனக்குத் தோன்றிய எண்ணம் இது தான், அதற்கு ஏற்ற மா தி ரி மல்லீஸ் வரத்தில் ஒரு பெண்ணின் பிரேதம் கிடப்பதாக இரவோடு இரவாக எங்க ளுக்குத் தகவல் கிடைத்தது. நானே ஒரு கடிதத்தை எழுதி அந்தச் சடலத்தின் மடியில் வைத்து வி ட் டு வந்து விட்டேன். அது யாருடைய பிரேதமோ தெரியவில்லை. நான் அதை நாச்சி யாரின் பிரேதமாக எடுத்துக் கொண்டு இந்தப் பணிகளேச் செய்தேன்’ என்று சொல்லி முடிப்பதற்குள் கோகிலா குறுக் கிட்டாள்.

“அப்படியாளுல் நாச்சி யார் இருக்கிருளா? அது அவள் சடலம் இல்லையா?”

‘இல்லை! இல்லை! அவள் கன்னிமாடத்தில் பெண்கள் காப் பகத்தில் இருக்கிருள். இப்போதாவது மயில்வாகனன் உணர் கிருளு? பாவம், பணக்காரப் பிள்ளைகள் பரபரப்புக்கு ஆளான வர்கள். அதனால் தான் மாரடைப்பு ரத்த அழுத்தம் எல்லாம் பணக்கார வியாதிகளாகி விட்டன.’’ என்றார் டேவிட்.

I 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/116&oldid=698906" இலிருந்து மீள்விக்கப்பட்டது