பக்கம்:பாடகி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எனக்கென்று தனி நினைப்பு எதுவும் இல்லை. பெண்கள் கல்யாணம் ஆகும்வரை மேகத்தில் நி ற் கு ம் நீராவி மாதிரி. கல்யாணமாகி விட்டாலோ, தரையில் விழுந்த மழைத்தண்ணிர் மாதிரி. எப்படிப்பட்ட தரையில் மழைத்துளி விழுகிறதோ அப் படிப்பட்ட மண்ணின் குணமேதான் அந்தத் தண்ணிருக்கும் உண்டு. அது போலத்தான் நானும், அதிபதியின் அலங்காரச் சீமாட்டி நான். அதிபதி என்ன நினைக்கிருரோ அதுதான் என் னுடைய நினைப்பும்.”

‘மங்களேஸ்வரி! நான் உன் மனதைச் சோதிப்பதாகக் கரு தாதே! உன் வயிற்றில் நிச்சயமாக ஒரு புலி பிறப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கை மட்டும் இருந்தால் போதுமா? அதற்கான முயற்சியும் நாம் செய்ய வேண்டாமா?

“நான் எதற்கும் த யார். அந்தப்புரத்தில் தாலாட்டுக் கேட்க எனக்கு விருப்பமில்லாமலா இருக்கும்?

‘மங்களேஸ்வரி; அருகில் வா. ஒரு முக்கியமான தகவலை நான் உன்னிடத்தில் சொல்லப் போகிறேன். உனக்கு விருப்ப மிருந்தால் அதைச் செய்வோம். மதுரைக்கோட்டையில் ஒரு பிரபல வைத்தியர் இருக்கிருராம்! குழந்தை இல்லாத பெண் களுக்குக் கருத்தரிப்பதற்கான தலைசிறந்த ம ரு ந் து அவரிடம் இருக்கிறதாம். அரண்மனைகள்,நம்மைப் போன்ற அதிபதிகளின் மாளிகைகளுக்கு மட்டும்தான் அந்த வைத்தியர் வருவாராம். அவரிடம் மருந்து சாப்பிட்டால் இந்தக் கோட்டையில் தீராத மன வியாதியாகப் பரவியிருக்கும் வம்சவிளக்கு இல்லையே என்ற குறை நிச்சயமாகத் தீர்ந்துவிடுமாம்; எனக்கு இந்தத் தகவல் ஒரு நம்பகமான இடத்திலிருந்து கிடைத்திருக்கிறது. உ ன் விருப்பம் அறிந்துதான் அவருக்கு அழைப்பு அனுப்ப வேண்டு மென்றிருக்கிறேன்.”

“அரும்புகள் அருணுேதயத்திற்குத் தவம்.கிடப்பது போல், ஒரு மழலையை என் மடியில்போட்டு நீலாம்பரி பாட நான் துடிக்கிறேன். இதற்குக் கூடவா என்னிடம் அனு ம தி கேட்க வேண்டும்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/134&oldid=698927" இலிருந்து மீள்விக்கப்பட்டது