பக்கம்:பாடகி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த உரையாடல் எங்கள் மத்தியில் படுக்கையறைப் பேச் சுப்போலவே இங்கிதமாக அமைந்தது. குழந்தை இல்லையே என்ற தாகம் எ ன் னே விட அவருக்குத்தான் அதிகமிருப்பது போல் எனக்குத் தெரிந்தது.

மறுநாளே ஒலைகள் பறந்தன. மது ைர நாயக்கர் அரண் மனையைச் சேர்ந்த ரங்கபாஷ்யம் என்ற அ ர ச வைத்திய சிகா மணி கமுதிக் கோட்டைக்கு வரவழைக்கப்பட்டார். த க தக வென்று மின்னும் தங்கநிற மேனியுடைய அவர் ஒரு ராஜகுரு வைப் போலவே தோன்றினர். அவருடைய மருந்துக்குக் கடு மையான பத்தியம் ஏதும் இல்லை. ஆனால், அதிசயமான பத்தி யம் ஒன்று உண்டு சுமார் நாற்பத்தைந்து நாள் கணவனேடு தொடர்ந்து மகிழ்ச்சியாகவே இரு க் க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கணவன் முகத்தில் கோபக்குறியை உண்டாக்கிவிடக் கூடாது. இதுதான் அந்த மருந்துக்குள்ள பத்தியம். வெறும் மருந்து குழந்தையைக் கொடுத்துவிடுமா? சில கனிகள் கொம்பிலே பழுக்கின்றன. வேறு சில கனிகள் தாமாகவே கணிக்கின்றன. இன்னும் கனிகளையோ ஊதித் தானே கணிய வைக்கவேண்டியிருக்கிறது. என் கதைமூன்றாவது கனி வகையைச் சேர்ந்தது போலும்!

அடுத்த கிழமையே வைத்தியம் தொடங்கியது. வைத்தி யர் சொன்ன பத்தியப் படி நானும் அவரும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். அரச காரியங்கள் பார்க்கிற நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் அவர் என் அந்தப்புரத்திலேயே இருந்தார். வேலை தவருமல் அவர் மருந்து சாப்பிட்டார். சிலநேரங்களில் ரோமாபுரி ராணிகள் திராட்சைப் பழங்களை ஊட்டுவதைப் போல மருந்து உருண்டைகளை நானே அவர் வா யி ல் ஊட்டி யிருக்கிறேன். இதிலிருந்து ஒர் உண்மை எனக்குத் தெரிந்தது. நானும் அவரும் வாரிசு இல்லை என்று வருந்துகிருேம்; ஆனால், வைத்தியர் அவருக்கு மட்டுமே ம ரு ந் து கொடுக்கிறார்; என் வயிற்றில் கருத்தரிக்காமலிருப்பதற்கு என் உடல் கூறு காரண மில்லை என்பதனைத் தெரிந்துகொண்டேன். இதை வெளியில் சொன்னாலும் அவர் வருந்துவார். இந்த உண்மையை நான்

134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/135&oldid=698928" இலிருந்து மீள்விக்கப்பட்டது