பக்கம்:பாடகி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்துகொண்டதாக அவர் அறிந்தாலும் வருந்துவார். இதை நன்கு உணர்ந்த நான் வழக்கத்திற்கு மேலாக அதிக உற்சாகம் காட்டினேன். என்னுடைய நடவடிக்கைகள் அவரை மேலும் மகிழ்வித்தன. மனிதனுக்கு மகிழ்ச்சி ஒரு புதிய ரத் த ஒட்டத் தைக் கொடுக்கிறது. அதே மகிழ்ச்சி தொடர்ந்திருக்குமாளுல் அவர்கள் முகத்தில் புதிய களையே தோன்றிவிடுகிறது. அப்படித் தான் என் கணவருடைய முகத்தில் ஜீவகளே அரும்பியது. அவ ருடையபேச்சிலும்,நடையுடை பாவனையிலும் வாலிபமிடுக்குத் தெரிந்தது இப்படியும் ஒரு மருந்திருக்கிறதா என்று நான் பிர மித்துப் போனேன். அந்த நாற்பத்தைந்து நாளும் நான் புதிய உலகத்தில் சஞ்சரித்தேன். கைமேல் பல ன் கிடைத்துவிட்ட தைப் போல எனக்குள் ஒர் உணர்ச்சி ஏற்பட்டது. அந்த இன் பச்சேதியைத் தமிழ்ப் பெண்களுக்கே உரிய மு ைற யி ல் சூசக மாக அவருக்குச்சொன்னேன். அ வ ரு ம் புரிந்துகொண்டார். :மங்களம் நமக்கு ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று நாம் நமது சேதுபதியை வே ண் டி க் கொள்ளவேண்டும். அப் படிப் பிறக்கும் குழந்தையைச் சேதுபதியின் திருப்பாதத்தில் வைத்துத்தான் பெயர் சூட்ட வேண்டும்” என்று அவர் பதில் சொன்னர்.

நாளுக்கு நாள் என் உடல் நிலையில் மாறுதல் தெரிந்தது. கணவனுக்குத் தெரியாத ரகசியம் இருக்கக்கூடாது என்பதற் காக உண்மையை அவருக்குச் சொல் லி அவர் மனதிற்கு இனிப்பு ஊட்டினேன். அவர் அளவில்லாத மகிழ்ச்சியடைந்து மதுரை அரண்மனைக்குத் தகவல் அனுப்பி வைத்தியரை வரும் படி ஒலை அனுப்பினர். வைத்தியர் ஒலையைக் கண்டதும் ஏதோ விபரீதம் ஏற்பட்டுவிட்டது என்று பயப்பட்டு, இரவோடிரவாக கமுதிக்கு வந்தார். வந்தவர் என்னைச் சோதித்துப்பார்த்துவிட்டு என் கணவர் வாழ்நாளில் அடையாத ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியைச் சொன்னர். பிரபு; கமுதி நாச்சியார் கர்ப்பவதி யாகிவிட்டார்’ என்ற செய்தியை வைத்தியர் சொல்லி முடிப் பதற்குள், அவருக்கு ஆயிரம் பொற்காசுகளே மகிழ்ச்சிக்கு அறி குறியாக அளித்தார் என் கணவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/136&oldid=698929" இலிருந்து மீள்விக்கப்பட்டது