பக்கம்:பாடகி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனல்...?

& உறங்காப்புலி சேர்வையின் புக ைழ பர்ப்புவதற்கு என் வயிற்றில் ஒரு ஒளிவிளக்கு உருவாகிவிட்டது என்ற மங்களமான செய்தியை நான் தொடர்ந்து மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடிய வில்லை. என்னைச் சாடி என் மனதை வேதனைப் படுத்துவதற்கு ஒரு துன்பம் ஒளிந்திருந்தது எ ன் பது மறுகணமே எனக்குத் தெரியவந்தது. மனிதர்கள் தொடர்ந்து பகற்பொழுதுகளே அனு பவிப்பது இல்லை. எப்படியும் இருட்டு வந் து பகலைக் கவ்விக் கொண்டு விடுகிறது அதுவரை பதுங்கிக்கிடந்த ஆந்தைகளும், காட்டுப் பூனைகளும் இருள் வந்ததும் இன்பக் கூத்தாடுகின்றன. என் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட சம்பவங்கள்தான் குறுக் கிட்டன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாயடக்கத்திற்குக் கூட இலக்கணம் வகுத்து வைத்திருப்பது நம் நாடு. ஆண்கள் எல்லாவற்றையும் வெளியில் பேசலாம்; சொல்லிச் சொல்லிச் சிரிக்கலாம்; ஆல்ை, பெண்களுக்கு அந்தச் சுதந்திரம் உண்டா? எதைச் சொல்லலாம், எ ைத ச் சொல்லக்கூடாது என்ற விதி முறைகள் பெண்களுக்குத்தானே விதிக்கப் பட்டிருக்கின்றன. அந்த விதிமுறைகளே உயிருக்கு ஆபத் து வரும்போது கூடப் பெண்கள் மீறமாட்டார்கள். ஆனால், மானத்திற்கும், கெளர வத்திற்கும் பங்கம் ஏற்படும் சூழ்நில வந்துவிட்டால் தான் தவிர்க்க முடியாமல் தமிழ் ப் பெண்களுக்கு மனம் விட்டுச்

சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது.

எனக்கு அந்த விபரீதமான கட்டமும் வந்துவிட்டது. என் வயிற்றில் கரு உருவான காலத்திலேயே உறங்காப்புலி சேர் வைக்கு வாதம் வந்துவிட்டது. அவர் படுத்த படுக்கையாகி விட்டார். வயிற்றில் பிள்ளையோடு, நான், அவருக்குப் பாசத் துடனும், பணிவுடனும், பணிவிடைகள் செய்து வந்தேன். குனிந்தால் நிமிர முடியாமலும், நிமிர்ந்தால் உட்கார முடியா மலும் இருந்து கொண்டு குழந்தையைச் சுமக்கும் ஒரு கர்ப்பஸ் திரி படும் துயரங்கள்தான் அவள் குழந்தைமீது கொள்ளும் பாதத்தையும் புருஷன்மீது வைக்கும் பக்தியையும் பிரதி பலிக்கின்றன. என்னைப் பொருத்தவரையில் நான் அப்படித் தான் கருதுகிறேன். ஏழைப் பெண்கள் எப்படி நினைக்கிறார் களோ தெரியவில்லை. ... or : - o

136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/137&oldid=698930" இலிருந்து மீள்விக்கப்பட்டது