பக்கம்:பாடகி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்தது. என்னை நோக்கி ஊர்ந்து வந்த விபரீதம் திடீரென்று ஓடிவரத் தொடங்கிவிட்டது போல் எனக்கு அச் சத்தை ஊட்டியது. எவ்வளவுதான் கற்றவர்களானலும் தடுக்க முடியாமல் அவர்கள் வாழ்க்கையில் விபத்துக்கள் நேர்ந்துவிட் டால் உடனே விதி விளையாடிவிட்டது என்று தங்களையும் அறி யாமல் சொல்லிவிடுவது நம் நா ட் டு ப் பழக்கமாகிவிட்டது. தமிழர் இரத்தத்தில் ஊறிப்போன அந்தப் பழக்கம் எ ன் னே மட்டும் விட்டுவைக்குமா? ஆம்; என் வாழ்க்கையிலும் விதி விளையாடத் தொடங்கிவிட்டது. விதி என்று ஒரு உருவம் இல்லை; இது பேயும் அ ல் ல, பிசாசுமல்ல! முடிவுகளுக்கும், நடந்தவைகளுக்கும் நாம் ஆறுதல் அடைந்து கொள்வதற்காக நாமாகச் சூட்டிக்கொண்ட பெயர்தான் விதி என்பது.

எங்கள் ஆசைப்படியே எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆல்ை, அதைக்கேட்டு மகிழ அவருக்கு உணர்ச்சி இல்லை. அவர் நினைவிழந்த பின்னர்தான் எனக்குக் குழந்தை பிறந்தது. அதை விடக்கொடுமையானது குழந்தை பிற ந் த பத்தாவது நாள் அவர் மரணமடைந்தது தான். விதி விளையாடமட்டுமல்லாமல் வெறியாட்டமே கொள்ளத் தொடங்கிவிட்டது. திடீரென்று இடியும் மின்னலும் தொடங்கி பசுமையான கிளைகளே எரித்து விட்டு அடி மரத்தை மட்டும் விட்டுவைத்து விட்டுப் போனது போல் என் வாழ்க்கை எனக்குத் தெரிந்தது.

அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் அந்தந்புரம் வரை தான் ரகசியங்கள் காப்பாற்றப்பட்டு வரும். அதைக்க ட ந் து விட்டால் அந்த ரகசியங்கள் காற்றைவிட வேகமாகப் பரவிடத் தொடங்கி கடைவீதி மு த ல் கள்ளுக்கடை வரை உடைத்து நொறுக்கப்பட்டுக்கிடக்கும். இதிலிருந்து நான் மட்டும் எப்படித் தப்பமுடியும்? நானே, புரு ஷ னை இழ ந் த மாதத்திலேயே பிள்ளையைப் பெற்றவள். என்ன விட்டு வைப்பார்களா?

என் கணவரின் மறைவு கு றி த் து சேதுபதி புலம்பினர். எனது வலது கரம் ஒடிந்துவிட்டது எ ன் று கூட வாய்விட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/138&oldid=698931" இலிருந்து மீள்விக்கப்பட்டது