பக்கம்:பாடகி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தந்தை தான். அவர் ஒய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி என்றேன். காயமடைந்தது மயில்வாகனனகத் ‘தானிருக்கும் என்ற என் யூகம் சரியாகப் போய்விட்டது.

என் சமாதானத்தைக் கே ட் ட து ம் மயில்வாகனனின் உதடுகள் விரிந்தன. அவர் முகத்தில் லேசான புன்முறுவல் தெரிந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு, என் அ ப் பா வி ன் விருப்பப் படியே மயில்வாகனனே எங்கள் வீட்டுக்கே கொண் டு வந்து சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தோம்.

நான் இரண்டு வாரங்களாக கல்லூரிக்கே செல்லவில்லை. காரணம், என் தந்தை செய்த தவறுக்கு நானே பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

படுக்கையில் இருக் கும் மயில்வாகனல்ை எழுந்து நட மாட முடியாது. எந்தப் பொருளையும் ைக யி ல் உறுதியாகப் பிடிக்க முடியாது. அவர் எழுந்து நடமாடும் வரை, நாம் தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று என் தந்தை என்னிடம் சொன்னது எனக்கு ஓரளவு நியாயமாகத் தான் பட்டது தினயை வாங்க கடை இருக்கலாம்; நெல்லை வாங்க மண்டி இருக்கலாம்; வினையை வாங்கச் சந்தை ஏது?

நான் மயில்வாகனனுக்கு மனக்குறை ஏற்பட்டு விடாமல் பணிவிடைகளைச் செய்து கொடுத்தேன். த ன் குழந்தையை அடுப்புக்கருகில் போகவிடாமல் த டு க் கு ம் ஒரு தாயாரைப் போல, என் பருவம் என்னைச் சில கட்டங்கள் வரை அவருக்குத் துணைபுரிய இடம் கொடுத்தது. அதற்கு மே லு ம் அவர் எதிர் பார்ப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?

ஒருநாள் காலை நான் அவருக்குக் கா பி கொடுப்பதற்காக அவரைச் ச த் தம் போட்டுக் கூப்பிட்டு எழுப்பினேன். அவர் என் கையைப் பற்றிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தார். நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அவரால் எழுந்திருக்க

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/70&oldid=699008" இலிருந்து மீள்விக்கப்பட்டது