பக்கம்:பாடகி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியாமல் தான், அவ்வாறு என் கையைப் பற்றியிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன். ஆனல் அவர் அப்படி நினைக்க வில்லை என்பதை மறுநாள் நடந்த சம்பவம்தான் எனக்கு

உறுதிப்படுத்தியது.

கநாச்சியார்’

என்ன வேண்டும்?”

“ஏதாவது நா வ ல் இரு ந் தால் கொடேன்; புத்தகம் படித்தே பல நாட்களாகி விட்டன”.

மறுநாள் புத்தகக் கடைக்குப் போய் நல்ல நாவல்களே வாங்கி வந்து கொடுப்பதற்காகப் படுக்கை அருகே போனேன். அன்று அவர் என்னைப் பார்த்த பார்வையே எனக்கு அருவருப் பைக் கொடுத்தது. நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். புத்தகத்தை வாங்கிக் கொள்வதைப் போல பாவனை செய்து கொண்டு என் கரத்தைப் பற்றினர். எனக்கு பயத்தால் உடம்பு வியர்த்து விட்டது. கொக்கைப் போல ஊமையாக இருந்து இதை மூடி மறைத்து விடுவதா, அல்லது வல்லுறுவைப் போல் சினங் கொண்டு சண்டை போடுவதா என்ற மனப் போராட் டம் என்னுள் எழத்தான் செய்தது கோழிகளும், வாத்துக் களும் முடிந்த வரை ஒடித் தான்பார்க்கும்; முடியாத கட்டத் தில் தான் சிறகடித்து பறக்க பார்க்கும். பெண்களும் அப்படித் தான். முடிந்தவரை பொறுமையாக இருப்பார்கள்; துன்பத்தின் எல்லைக் கோட்டுக்குப் போன பிறகுதான் விஷயங்களை வெளிப் படுத்துவார்கள்.

மயில்வாகனன் எனது பொறுமையை நான் அவருடைய எண்ணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறேன் என்று நினைத்துவிடக் கூடாதே என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. அதற்காக நான் ஒருவேலை செய்தேன். மறுநாள் அவருக்கு இன்னொரு நாவலைக் கொடுக்கப் போகும்போது அதற்குள் என் எண்ணத்தை சுருக்க மாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதி அந்த நூலில் வைத்துக் கொடுத்தேன். கடிதம் மிகவும் சுருக்கமானது. ஒரு சிறிய

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/71&oldid=699009" இலிருந்து மீள்விக்கப்பட்டது