பக்கம்:பாடகி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டை ஒரு பெரிய கப்பலேக் கவிழ்த்து விடுவதைப் போல அந்தச்சிறிய கடிதம்தான் என் வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பி விட்டுவிடும் என்று நான் கனவு கூடக் காணவில்லை. இதுதான் கடிதம்

அன்புடையீர்,

வணக்கம், தாங்கள் சில நாட்களாக என்னிடம் நடந்து கொள்ளும்முறை எனக்குப் பெரிதும் மனத்துயரத்தை அளித்து வருகிறது. நான் உங்களுடன் பழகுவதையும், பேசுவதையும், பணிவிடைகள் செய்வதையும் நீங்கள் தவருகப் புரிந்துகொண்டு நான் உங்களைக் காதலிப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்

அது தவறு. -

என் தந்தை பொல்லாதவர்; மிகவும் பொல்லாதவர்; அவருக்குத் தெரிந்தால் விபரீதமாகப் போய்விடும். ஆகவே என்னை மறந்து விடுங்கள்.

- இப்படிக்கு நாச்சியார்

-இதுதான் நான் எழுதிய கடிதம். இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்னர் அவர் முகவாட்டத்தோடு காணப் பட்டார். கடுகடுவென்று பேசினர். பேச்சோடு பேச்சாக ஒரு நாள், இப்போது தான் நீ வகையாகச் சிக்கிக் கொண்டாய். நான் உன்னை அடைய முடியாவிட்டாலும், நீ கருணையானந் தத்தை அடைய முடியாது’ என்று சூடாகச் சொன்னர் இதைக் கேட்டதும் என் மனம் இருளடைந்தது போல் தோன்றியது.

மயில்வாகனன் பெரிய பணக்காரர். எதையும் துணிந்து செய்யலாம் இருந்தாலும் என் வீட்டுக்குள் இருந்து கொண்டே என்ன செய்துவிடமுடியும் என்றுதான் சாதாரணமாக நினைத்து விட்டேன்; இப்படியே விடிந்தும் விடியாததுமாக பத்து நாட்கள் ஓடின. அவரைப் பார்ப்பதற்கு மாணவர்கள் வந்து போக ஆரம்பித்தார்கள்.

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/72&oldid=699010" இலிருந்து மீள்விக்கப்பட்டது