பக்கம்:பாடகி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேஜர் சார், மயில் இல்லாமல் எங்கள் கல்லூரிக்கு விளை யாட்டுப் பதக்கங்கள் எதுவும் இந்த ஆ ண் டு வராமல் போய் விட்டது”. .

‘மன்னிக்க வேண்டும்; எதிர்பாராமல் இ ப் ப டி நடந்து விட்டது”.

என் தந்தை அவர் வாழ்நாளில் -4- குனிந்து கொடுத் ததே இல்லை.

‘என்ன இருந்தாலும், மே ஜ ர், இனி மயில்வாகனன் வாழ்க்கை சுபிட்சமாக இருக்குமென்று நினைக்கிறீர்களா? அவனுக்கு ஒரு கை ஒச்சமாகப் போய் வி ட் டது. அவனிடம் இலட்சக் கணக்கில் பணம் இ ரு க் க லா ம்; பெரிய வீட்டுக் காரணுக இருக்கலாம். ஆனல் இதையெல்லாம் ந ம் பி யா ஒரு பெண் அவனுக்கு மனைவியாகப் போகிருள். அவன் வாழ்நாள் முழுதும் அரைக்கை சட்டையே போட முடியாது. கையை மறைப்பதற்கு எப்போதும் மு ழு க் ைக சட்டைதான் போட வேண்டும்’ என்று அடுக்கிக் கொண் டே போனார் ம யி ல் வாகனனின் நண்பர் ஒருவர். அவர் வ ர லா ற் று மாணவரா கையால், அவர் பேச்சே ஒரு விரிவுரையாக இருந்தது.

நான் புரிந்து கொண்டேன் மாணவர்கள் எந்தக் கட்டத் திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. இப்படியே மாண வர்களின் மிரட்டல் வேலைகள் தொடர்ந்து வ ந் து கொண்டி ருந்தன. எத்தனையோ மாணவர்கள் மயில்வாகனனைப் பார்க்க வருகிறார்கள். ஒரு நாள் கூட கருணையானந்தம் வரவில்லையே என்று நான் துக்கப்படாமல் இல்லை. பலமுறை என் கண்களைக் கசக்கி கொண்டிருக்கிறேன். ஒரு நாள், நான் ஆச்சரியப்படதக்க வகையில் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. மிகுந்த ஆவலோடு, சினிமாக்களில் வரும் காதலிகளைப் போல, நான் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். ஆ ைல் அது கடிதமல்ல! அது சம்மட்டி அடி! .

72.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/73&oldid=699011" இலிருந்து மீள்விக்கப்பட்டது