பக்கம்:பாடகி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரி நாச்சியாருக்கு,

உன் கடிதம் கிடைத்தது. நீ எ ன் னே விரும்பவில்லை என் பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்திருப்பது, உ ன் னி ட முள்ள நல்ல பண்புகளில் ஒன்று. அந்தப் பண்பை வரவேற் கிறேன். உன் தந்ைைத ஏற்பாடு செய்யும் மணமகனைக் கைப் பிடித்து வளமாக வாழ வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு கருணையானந்தம்

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் என் கண்கள் பஞ்சடைந்து விட்டன. ஏதோ சதி நடந்திருக்கிறது என்று மட்டும் எனக்குப் புரிந்தது. ஆனால் யார் செய்த சதி? எப்படி நடந்த சதி என்பதை மட்டும் என்னல் புரிந்து கொள்ள முடிய வில்லை.

நாச்சியார்!’ என்று மயில்வாகனன் கூப்பிட்டார். அருகில் போய் என்ன வேண்டும்? என்று கேட்டேன்.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்; நீ படித்தாயே, அது கடிதமா?’ என்று நையாண்டியாகக் கேட்டார்.

‘இது என் சொந்த விஷயம்’ என்றேன். . .

‘பிறரது சொந்த விஷயங்களில் த லே யி ட் டு ஆறுதல் சொன்னல் தான் அது ஊக்கமளிப்பதாக இருக்கும். பொது விஷயங்களில் தலையிட்டால் அது வில்லங்கமாகப் போய்விடும்!” மயில்வாகனனின் பேச்சில் விதர்ப்பம் தெரித்து விழுந்தது. அப்போது அவரது நண்பர், அன்று என்தந்தையிடம் அடமாகப் பேசியவர் உள்ளே நுழைந்தார்.

‘மயில், அன்று நீ கொடுத்த கடிதத்தை அன்றே தபாலில் போட்டுவிட்டேன். மூன்று நாட்களுக்கு முன்பே அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டுமே! இன்னும் இங்கு எதிரொலிக்க வில்லையா? பரவாயில்லை! லேட் சக்சஸ் தான் உறுதியாக இருக்கும்’ என்று இடக்காகப் பேசிக் கொண்டே போனன். எனக்கு அந்தக் கணத்தில் நானே என் தலையில் நெருப்பை

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/74&oldid=699012" இலிருந்து மீள்விக்கப்பட்டது