பக்கம்:பாடகி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளிக் கொட்டிக் கொண்டது போல் உணர்ந்தேன். நான் பத்து நாட்களுக்கு முன்பு மயில்வாகனனுக்கு ஒரு கடிதம் எழுதி புத்தகத்திற்குள் வைத் து மயில்வாகனிடம் கொடுத்ததை அப்படியே அவர் கருணையானந்தத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்ற யூகம்மட்டும், என்ன வர்ணம் என்று புரியாமல் ஆகாயத் தில் பறக்கும் பட்டம்போல் தெரிந்தது.

என் முகம் சிவந்து என் தந்தை பார்த்ததில்லை; என் முடி அவிழ்ந்து என் முதுகில் தொங்கியதையும் அவர் கண்டதில்லை. அன்று மட்டும் அவர் அந்தக் கோலத்தில் கண்டார்.

“என்னம்மா இதெல்லாம்?’ என்றார்.

அப்பா, உ ங் க ளு க் கு ஆண் குழந்தையில்லை; அந்தக் குறையை நான் உங்களுக்கு நிவர்த்திக்கப் போகிறேன்!” என்றேன்.

“நாச்சியார்!’

‘உண்மை தானப்பா, எனக்கு அண்ணனே தம்பியோ இருந்திருந்தால் உங்களுக்கு நேர்ந்திருக்கும் மனச்சங்கடத்தை போக்கியிருப்பார்கள் யாருக்கும் தலைவனங்காத உங்களிடம் பலர் பலவிதமாகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்க மாட் டார்கள். நானே பெண்ணுகப் பிறந்து விட்டேன். என்னல் ஒரே ஒரு உதவிதான் செய்ய முடியும். அந்த உதவியைத் தான் மயில்வாக்னனும் அவரது ந ண் பர் க ளு ம் விரும்புகிரு.ர்கள். மகிழ்ச்சியோடு என்னை வாழ்த்துங்கள். நான் மயில்வாகன ரையே திருமணம் செய்து கொள்ளத்தீர்மானித்து விட்டேன்’’. இப்படி நான் சொன்னபோது என் கண்களில் கண்ணிர் பனிப் பூக்களைப் போல் பூத்து ஒழுகினலும் நான் தீர்க்கமாக முடிவு செய்துதான் இப்படிச் சொன்னேன். இதை விதி என்று சொன்னல் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்; இதைத் தலை யெழுத்து என்று சொன்னலும் என் மனம் ஏற்காது. ஏனெனில் இந்த முடிவு நானே எடுத்தது இதுதான் உன் எதிர்காலம்,

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/75&oldid=699013" இலிருந்து மீள்விக்கப்பட்டது