பக்கம்:பாடகி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னுல் இதை மாற்ற முடிந்தால், செய்து கொள் என்று எனக்கு முன் கூட்டியே சவால் விடுத்து அதில் நான் தோல்வி அடைந்தால்தான் அதை விதி என்று கூறலாமே தவிர ஏற்பட்டு விட்ட முடிவுகளுக்கெல்லாம் விதி என்று கூறிவிடுவது எப்படி வாழ்க்கைக் குரிய நீதியாக முடியும்? காய் பழுத்துக் கனியா வதும் இலை பழுத்துச் சருகாவதும் அதன் விதிகளாகி விடுமா? தாவர இயல் படிக்கும் எனக்கு அந்த மாற்றத்தை, வளர்ச்சியின் முதிர்ச்சி என்றுதான் கற்பித்துக் கொடுத்திருக்கிறர்களே தவிர அவைகளே விதி என்றாே, பிராப்தம் என்றாே எந்தப் பேராசிரி யரும் எங்களுக்குக் கற்றுத்தரவில்லை.

இது தான் என் முன்கதை நான் ஒரு தமிழ்ப் பெண்ணின் நெறியிலிருந்து எந்த நிலையிலும் நழுவி விடவில்லை என்றே என் மனசாட்சி எனக்குச் சொல்விக்கொண்டிருக்கிறது இனி நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்!

o & * go {{ 2

1

நந்தி

இல்லற வாழ்க்கை என்பது ரயிலோட்டம் மாதிரி. ரயில் மட்டும் சரியாக இருந்து பயனில்லே. கைகாட்டியும் ஒழுங்காக இயங்க வேண்டும். இவை இரண்டுக்கும் மேலாக தண்டவாளங் களும் பெயராமல் இருக்கவேண்டும். நாச்சியாரும் கருணையா னந்தமும் சேர்ந்து நடத்த வேண்டிய இல்லற வாழ்க்கையை ஒரு துண்டுக்கடிதம் பிரித்துவிட்டது. இப்போது மயில்வாகன னுக்கு மனைவியாகிவிட்டாள். இரண்டாவது உலகப்போரில் வெற்றி வாய்ப்பை இழந்த நேச நாடுகள் ரஷ்யாவின் மீது படிந்திருந்த பணியினல் திடீர்த் திருப்பத்தை அன்டந்து மகத் தான வெற்றியை ஈட்டியதைப் போல மயில்வாகனன் ஒரு கடிகத்தினல் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுவிட்டான்.

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/76&oldid=699014" இலிருந்து மீள்விக்கப்பட்டது