பக்கம்:பாடகி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை முறையில் தமிழகம் தனிச்சிறப்புப் பெற்றது. வாழ்க்கைக்கே இலக்கணம் வைத்திருப்பது தமிழ் நாட்டில் தான். மற்ற நாடுகளில் மொழிக்குத்தான் இலக்கணமுண்டு. மொழியைப் பிழையின்றி பேசுவார்கள் எழுதுவார்கள். ஆனல் இங்கு வாழ்க்கை முறையே அப்படித் தான் நடத்த வேண்டும். திருமணமாகாத வரைதான் பெண்கள், உடுக்காத பட்டுப் புடவை மாதிரி; கழுத்தில் தாலி ஏறிவிட்டால், பிறகு அவர்கள் உடுத்திப் போட்ட பழைய புடவை மாதிரிதான். கிழிந்து கந்த லாகும் வரை அந்தப் புட ைவக்கு அதுதான் வீடு. அவளுக்கும் அதுதான் புகலிடம்.

நாச்சியாரின் கனவுகள் பொ டி யா ன லு ம் கனவுகள் பொய்த்துப் போனலும், தமிழ்ப் பெண்ணின் மரபுகளிலிருந்து அவள் நழுவவில்லை. கடமையும் சூழ்நிலையும்தான் அவளைத் திசை திருப்பிவிட்டு விட்டன என்பதை அவள் உணர்ந்தாள்.

அவளுக்கு அந்த வீட்டில் குறையே ஏற்படவில்லை. அதற்கு மாருக கிடைக்காதவள் கிடைத்துவிட்டதாக எண்ணி, அந்த வீட்டில் அவள் ராணியாகவே மதிக்கப்பட்டாள். அவளை அரச வம்சத்துப் பெண் ண க வே நடத்தவேண்டுமென்பது மயில் வாகனனுக்குத் தனியாத ஆசை. அதனால்தான் புதுக்கோட்டை அரண்மனைக்கு அவளே அடிக்கடி அழைத்துப்போன்ை. அப்படிப் போய் வந்து கொண்டிருந்த போதுதான் காரில் இடியும் மின்ன லும் தாக்கி நாச்சியாரின் மூளையை கலங்க வைத்துவிட்டது. திருச்சி, கொடைக்கானல் முதலிய இடங்களிளெல்லாம் மருத் துவம் பார்த்தும் பலனளிக்காமல் டா க் டர் ராஜசேகரன் யோசனைப்படி பெங்களூரில் உள்ள லேடி டாக்டர் கோகிலாம் பாளிடம் சிகிச்சை செய்வதற்காகப் பெங்களுர் பயணமானள்,

டாக்டர் கோகிலாம்பாள் சிறந்த மனோதத்துவ நிபுணத் துவம் பெற்றவள். அவளைச் சந்திப்பதற்காக முதலில் அவளோடு தொலைபேசியில் பேசினன் மயில்வாகனன்.

அதற்கு அவள் “என்னை வீட்டில் பார்ப்பதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. காலை பத்து மணிக்கு நோ யா ளி ைய

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/77&oldid=699015" இலிருந்து மீள்விக்கப்பட்டது