பக்கம்:பாடுங்குயில்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றமது செய்கின்ற போது-தந்தை கூரு திருப்பானே? ஈ தென்ன தீது? பெற்றவர்கள் கண்டித்து நின்ருல்-என்ன பிழைவந்து நேருமவர் சொன்னபடி சென்ருல்?

தாய்தந்தை காட்டுகிற சீற்றம்-பிள்ளை தற்காத்துக் கொள்ளத்தான் வேறென்ன மாற்றம்? நோய்பற்று முன்னேதெ ரிந்து-தாய் iநூறிக்க ரைத்துக்கொ டுப்பாள்ம ருந்து.

ஐந்திலே படியாத பிள்ளை-கூட்டில் அடைத்துக் கிடக்கின்ற பேசாத கிள்ளை நைந்திருளில் மூழ்குமே வாழ்வு-விடியல் நாளைக்குத் தோன்றுமோ? ஏனிந்தத் தாழ்வு?

பயிர்செய்யுங் காலத்தில் நட்டால்-நல்ல பலன்கிட்டும்; என் குைம் பருவத்தை விட்டால்? அயராதிப் போதேமு யன்ருல்-நன்மை ஆடிப்பெருக் கெனவே ஓடிவரும் அன்ருே?

! நூறி-அரைத்து

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/107&oldid=593982" இலிருந்து மீள்விக்கப்பட்டது