பக்கம்:பாடுங்குயில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பினை நலமுறக் காட்டிடுவோம்

உரிமையை உலகினில் நாட்டிடுவோம்

பிழைப்பினைப் பறித்திடும் கூட்டமதைப்

பெரும்புலி போலெழுந் தோட்டிடுவோம்

உறிஞ்சிடும் அட்டைகள் உலவிடுமேல்

உலகமும் அறநெறி விலகிடுமே

அறிந்திடின் அனைவரும் நலமுறலாம் அமைதியும் நிலமிசை நடமிடலாம்

இயற்கையின் விளைவெனும் உடைமையெலாம் யாவரும் பெறஒரு தடையிலையாம் o

செயற்கையில் அவை தனி யுடைமையெனில்

சிறியவர் செயலது மடமையுமாம்

நலமுற அனைவரும் கூடிடுவோம்

நாட்டினில் அமைதியை நாடிடுவோம்

மலர்விரி சோலையைத் தேடிடுவோம்

மனங்கவர் குயிலெனப் பாடிடுவோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/11&oldid=593880" இலிருந்து மீள்விக்கப்பட்டது