பக்கம்:பாடுங்குயில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை வகிப்போம்

沿

சுரண்டலும் பதுக்கலும் ஒழிப்போம்-அதற்குத்

துணைவரும் பகைதனை அழிப்போம்

இரண்டிலும் பிழைப்பவர்ப் பழிப்போம்-அவர்க்கே

இனியொரு விதிமுறை விதிப்போம்

மனிதனை உழைப்பினை மதிப்போம்-கொடிய

வறுமையை இடரினை மதிப்போம்

இனியநல் லுலகினைப் படைப்போம்-அங்கே

எதிர்வரும் தடைகளை உடைப்போம்

உடையவர் எளியவர் இருப்பார் - அதுதான்

உலகினில் விதியென வகுப்பார்

'கடையவர் உயரியர் பிறப்பால்-இருப்பர்

கடவுளின் செயலென உரைப்பார்

கடவுளை விதியினை மறுப்போம் - துTய கடமையை உரிமையை மதிப்ப்ேர்ம்

மடமையை அடிமையை வெறுப்போம் - நல்ல

மதியினை உணர்வினை வளர்ப்போம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/12&oldid=593881" இலிருந்து மீள்விக்கப்பட்டது