பக்கம்:பாடுங்குயில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல்களில் உழைப்பினைக் கொடுப்போம்-அங்கே

வருபயன் அனைத்தையும் எடுப்போம்

துயரிலை எனமடல் விடுப்போம் - உழைப்பால்

சுரந்திடும் பொருள்களை மடுப்போம்

பொறிகளுந் தறிகளும் வளர்ப்போம் - அங்கே

புதுநெறி முறைகளில் உழைப்போம்

நிறைவுறு பொருள்களை விளைப்போம் - நாட்டின்

நிலையுயர் வெய்திடச் செழிப்போம்

புதுமுறை உலகினைப் படைப்போம் - அங்கே

பொதுமையில் அறநெறி விரிப்போம்

உதவிடும் மனத்தோடு சிறப்போம்-உலகில்

ஒருசரி நிகரென இருப்போம்

அயர்வினைப் பகையெனத் தகர்ப்போம் - நாளும்

அவரவர் கடமையை உகப்போம்

அயலவர் சுரண்டிடின் செகுப்போம் - அந்த

அணியினில் தலைமையை வகிப்போம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/13&oldid=593882" இலிருந்து மீள்விக்கப்பட்டது