பக்கம்:பாடுங்குயில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்பணி யாற்றுவோம்

ゴeーさ-na フ今

8k

நாட்டுக்கு நற்பணி யாற்றிடுவோம்-வாழ்வில் நல்லவர் கொள்கையைப் போற்றிடுவோம்

கூட்டத்தில் உண்மையைச் சாற்றிடுவோம்-அங்குக்

கூறிய தைச்செயல் ஆக்கிடுவோம்

நற்கலை பற்பல நாட்டிடுவோம்-இந்த நானிலத் திற்புகழ் கூட்டிடுவோம்

தற்குறி என்றிலா தாக்கிடுவோம்-தீய

தந்நலம் யாவையும் போக்கிடுவோம்

விஞ்ஞானி பற்பலர் உண்டெனவே-இங்கு வேண்டும்மு யற்சிகள் கண்டிடுவோம்

பொய்ஞ்ஞானப் பித்தரை வென்றிடவே-இந்தப்

பூமிக்கு நல்வழி கண்டிடுவோம்

ஏழைமை நீக்கிடச் சூளுரைப்போம்-தீமை எங்கெழு மாகினும் வாளெடுப்போம்

தோழமை பாடிட யாழெடுப்போம்-மக்கள் துன்பங்கள் யாவையும் துளடிப்போம்

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/112&oldid=593987" இலிருந்து மீள்விக்கப்பட்டது