பக்கம்:பாடுங்குயில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதிகள் ஆக்கிய தீமைகளை-அந்தச் சாத்திரக் குட்டையின் ஆமைகளை

மோதித் தகர்த்திடல் தீமையிலை-நீங்கள் மூண்டெழு வீரினும் ஊமைகளோ?

சோம்பலை ஏய்த்தலை நீக்கிடுவோம்-கெட்ட

சூழ்ச்சிகள் வஞ்சனை போக்கிடுவோம்

கூம்பிய தோள்களை ஏற்றிடுவோம்-நாளும்

கூடும் உழைப்பினை யாக்கிடுவோம்

வாய்ப்பறை சாற்றலைத் தைத்திடுவோம்-நெஞ்சில்

வாய்மையை நேர்மையை வைத்திடுவோம் ஏய்ப்பதை நாமினி நைத் தெறிவோம்-பொய்யை

ஏறி மிதித்ததைப் பிய்த்தெறிவோம்

வேதங்கள் பூதங்கள் என்றுரைத்தால்-அந்த

வீனரின் கொள்கையைக் கொன்றழிப்போம்

வாதங்கள் மேடையில் நின்றுரைப்போம்-சொன்ன

வாய்மைகள் யாவையும் நன்றமைப்போம்.

i 09

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/113&oldid=593988" இலிருந்து மீள்விக்கப்பட்டது