பக்கம்:பாடுங்குயில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது உலகம்

2 交す〜女ー14??今

எனக்கென உண்டொரு வுலகம்-அங்கே

இன்பங்கள் வந்தெனைத் தழுவும்

மனத்தினில் தானது குலவும்-வந்த

வாட்டங்கள் விட்டெனை விலகும்

பலப்பல புதுமைகள் நிகழும்-நல்ல

பாடல்கள் பற்பல திகழும்

சொலச்சொல மனமது மகிழும்-அந்தச்

சுவையினில் நாவது புகழும்

மிதப்பது போலொரு கனவு-காதல்

மெல்லிய மாதரின் உறவு புதுப்புது நினைவுகள் வரவு-நெஞ்சப்

பூவினில் சுவைமிகு நறவு.

இனித்திடும் அவ்வுல கதனில்-என்னை

எதிர்த்திட ஒருபகை யிலையே கனிச்சுவை யனைய என் மொழியைக்-கேட்டுக்

கருத்துடன் தொடர்வரென் வழியை

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/114&oldid=593989" இலிருந்து மீள்விக்கப்பட்டது