பக்கம்:பாடுங்குயில்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளைய நாடு

2 km〜必〜1a2?

அதோ அதோ ஒரு நாடு-கண்ணின் அருகில் தெரிவதை நீ பாடு.

-அதோ எத்தனை எத்தனைக் கலைகள்-அவை அத்தனை யுந்தமிழ் மொழியில் இத்தரை மீதினில் உலவும்-கலை எத்தனை அத்தனை நிலவும்

-அதோ கற்றிட வந்தனர் கலையே-வெறும் கத்தலும் கூச்சலும் இலையே கற்றவிஞ் ஞானியின் அலைகள்-நாடு காத்திடும் நினைவுடன் உலவும்

-அதோ புத்தம் புதுத்தொழில் உயரும்-அவை பூத்துக் குலுங்கிட வளரும் எத்திசை நோக்கினும் கதவம்-அங்கே எப்பொழு துந்திறந் தொளிரும்

-அதோ

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/120&oldid=593995" இலிருந்து மீள்விக்கப்பட்டது