பக்கம்:பாடுங்குயில்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகிய மணவாளன்

パーフ〜7%の6

அவர்போல மணவாளன் யாரடி? -என்றன் ஆரணங்கே உண்டென்ருல் கூறடி

-அவர்

கவர்கின்ற மொழிபேசும் சொல்லழகன்-என்பால் காலமெ லாம்பொழியும் அன்பழகன்-ஆணழகன்

- அவர் உறவாடி மகிழ்வூட்டும்.குணத்தழகன்-கொள்கை உரமேறி நிற்கின்ற மனத்தழகன் (பொன்) நிறமான உடலாலே வனப்பழகன்-கான்றன் நிழலான அவர்தானே எனக்கழகன்-அழகன்

-அவர்

பழியேதுங் காணுத நடையழகன்-நல்ல பால்போலும் நிறமான உடையழகன்

மொழியாலே போராடும்படையழகன்-பகைவர் முகம் நாண உரையாடும் விடையழகன்

-அவர்

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/125&oldid=594000" இலிருந்து மீள்விக்கப்பட்டது