பக்கம்:பாடுங்குயில்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறையாத வடிவங்கள் பலவாக்குவோம் மரபாக வருமாறு கலையாக்குவோம் குறையோடு திரிகின்ற நிலைபோக்குவோம் குலமான கவிவாணர் பழி நீக்குவோம்

வண்ணங்கள் எண்ணங்கள் புதிதாகவே வடிவங்கள் அமையுங்கள் மரபாகவே எண்ணுங்கள் எண்ணுங்கள் முனியாமலே எழுதுங்கள் முயலுங்கள் இனியாவது

தனியான மரபுள்ள தமிழாகுமே தரமான நெறிகொண்ட மொழியாகுமே இனிதான வழிமாறித் தடுமாறில்ை இனிமேலும் உமைநோக்கி எதுகூறுவேன்?

123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/127&oldid=594002" இலிருந்து மீள்விக்கப்பட்டது