பக்கம்:பாடுங்குயில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் தனிற் பனிநீர் குந்தும் - அதுதான்

மனமகிழ் அழகினைச் சிந்தும்

உலரிய விழிநீர் சிந்தின் - என்றன்

உளமோ கடலெனப் பொங்கும்

விரித்திடும் தோகையின் கண்கள் - காணின்

விஅளத்திடும் என்மனம் பண்கள்

தரித்திடும் ஆடையிற் கண்கள் - காணின்

தலைக்கொளும் ஆயிரம் புண்கள்

முழுமதி வடிவினில் குறையும் - அதுவும்

முழுமையும் ஒருநாள் மறையும்

உழுபவன் வடிவினில் குறையின் - என்றன்

உளமோ கனலாய்ப் புகையும்

பசியுடன் நலிவுகள் மிகுத்தால் - இங்கே

பாய்புலி யாய்மணஞ் சினக்கும்

இசையா வுலகினைப் படைத்தால் - இனியும்

எப்படி என்மனம் பொறுக்கும்?

11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/15&oldid=593884" இலிருந்து மீள்விக்கப்பட்டது