பக்கம்:பாடுங்குயில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரு விளக்கு

மிகத்துணி வுடனே நடுத்தெரு வோரம்

விரவிய இருளில் நிலைபெறும் ஓர் தொழிலேன் அகப்பொருட் கள்ளர் புறப்பொருட் கள்ளர்

அவரவர் செல்வார் அறிந்தும் வாய்மொழியேன்

பனியிலும் மழையிலும் நனைவதும் உண்டு

பகல் தரும் வெயிலில் காய்வதுந் தினமுண்டு தினையள வெனினும் தனிநலம் இன்றிச்

செய்திடும் பொதுநலஞ் சேரும் மனமுண்டு.

புகுமிருள் கண்டால் எனைவர வேற்றுப்

புவியோர் தொழுவார் புகழ்வார் கைகுவித்தே பகல்வரும் அதன்பின் என மதி யார் இப்

பாரினர் செயலை நகைப்பேன் வாய்குவித்தே

ஊரார் அனைவரும் விழிதிற வாமல் = -

உறங்கிடு வார்.நான் இரவினில் விழித்திருப்பேன்

சோரா விழியிமை ஒருநாள் சோர்ந்தால்

துாற்றுவர் பழிகள் சாற்றுவர் பொறுத்திருப்பேன்.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/34&oldid=593903" இலிருந்து மீள்விக்கப்பட்டது