பக்கம்:பாடுங்குயில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் ಕ್ಲಿಲ್ಡಣT6ಣಿ

(労・soいァ多

o

என்றும் நானேர் இளைஞன்-பாடல்

எழுதிக் கொழிக்குங் கவிஞன்

ஒன்றும் வாழ்விற் சுவைஞன்-நெஞ்சில் உணர்ச்சித் துடிப்போ மிகைஞன்

செந்தமிழமுதம் உண்டேன்-முதுமை

சிறிதள வேனும் அண்டேன்

சிந்தையில் இளமை கொண்டேன்-உலகம்

சிறிதாய்த் தோன்றிடக் கண்டேன்

கற்பனைப் பெண்ணே வருவாய்-நின்றன்

கைகளை என்பால் தருவாய்

பொற்கலன் ஆயிரந் தருவேன்-அவையே

புதுமைக் காவிய உருவாம்

ஊரார் ஏதோ மொழிவார்-அதுதான்

உளறும் வாயர் தொழிலாம்

பாராய் என நீ விழியால்-என்னைப்

பழகிய பின்நீ குழைவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/44&oldid=593912" இலிருந்து மீள்விக்கப்பட்டது