பக்கம்:பாடுங்குயில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

研6}6J们山岳6ULLL田 ഠ-19-25

AWA:

  • Հ:

உண்பொருள் எல்லாங் கலப்படம்-பேசும்

உண்மையில் பொய்யுங் கலப்படம்

கண்படும் யாவுங் கலப்படம்-இங்கே கண்ணியம் எங்கே உருப்படும்?

பண்புகள் எல்லாங் கலப்படம்-எண்ணிப்

பார்ப்பவர் நெஞ்சில் புலப்படும்

மண்படும் எண்ணெய் கலப்படம்-வஞ்சர்

மண்டையில் கூடக் கலப்படம்

செந்தமிழ்ப் பாட்டில் கலப்படம்-நெஞ்சில்

சிந்தனை, பேச்சில் கலப்படம்

சந்தனப் பூச்சில் கலப்படம்-கோவில்

சாமிகள் கூடக் கலப்படம்

நெய்திடும் நூலில் கலப்படம்-நல்ல

நெய்தரும் பாலில் கலப்படம்

செய்தொழில் யாவுங் கலப்படம்-கள்வர்

செய்கையின் பேரே கலப்படம்

6:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/66&oldid=593935" இலிருந்து மீள்விக்கப்பட்டது