பக்கம்:பாடுங்குயில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைத்திட மெல்லுடல் வளைவார்-பெண்மை திகைத்திடக் கோணலில் குழைவார் - தகைத்திடும் ஆடையைக் களை வார்-அந்தோ புகைப்படங் காட்டிட அலைவார்

படுத்திடும் காதலர் அறையில்-உள்ளே நடத்திடும் செய்கையைத் திரையில் படைத்திடல் தானெரு கலையா?-பண்பை முடித்திட வேஎழும் கொலையா?

கலைப்பெயர் சொல்லியே திரிவார்-கெட்ட புலைத்தொழில் ஒன்றையே புரிவார் நிலைத்திடு சிந்தனை யறிவார்-இங்கே தலைப்படி னேநலம் உருவாம்

மடத்தனம் மிக் கனர் மடவார்-ஆண்கள் தடுத்திலர் முற்பட மிடைவார் குடித்தனந் தானுருப் படுமா?-அந்தப் படத்தொழில் தான் சரிப் படுமா?

மிடைவார்-நெருக்கமாகக் கூடுவார்

65.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/69&oldid=593939" இலிருந்து மீள்விக்கப்பட்டது