பக்கம்:பாடுங்குயில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் எங்கள் கையிலே! ア * /*ーフマ「

శః

குலுக்கிக் குலுக்கி ஆட்டுவோம்-உடலைக்

குனிந்து நிமிர்ந்து காட்டுவோம்

துலக்கி ஆசை ஊட்டுவோம்-எம்மைத் தொடருங் காசைக் கூட்டுவோம்

காமஞ் சொட்டப் பாடுவோம்-ஆடை

கலைய விட்டே ஆடுவோம்

காமக் காட்சி நாடுவோம்-அந்தக்

கலையை வளர்க்கக் கூடுவோம் .

நடிப்பை முகத்தில் தேக்கில்ை-எவரே

நயந்து வந்து பார்க்கிருர்? இடுப்பை வளைத்துக் காட்டில்ை -மொய்க்கும்

ஈக்கள் போலக் கூட்டமே

முகத்தில் உணர்ச்சி கூட்டினல் எந்த

மூடன் வருகை காட்டுவான்?

அகத்தில் உணர்ச்சி ஊட்டினுல்-கூட்டம்

ஆட்டு மந்தை காட்டுமே.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/70&oldid=593940" இலிருந்து மீள்விக்கப்பட்டது