பக்கம்:பாடுங்குயில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் காவியம்

t び 〜 <! ーアム

£3.

இலக்கியம் ஒன்று படைப்போம்-காதல் இலக்கணம் முழுமையும் அதனுள் அமைப்போம்

-இலக்கியம்...

மலர்த்தொடை அணிந்திடும் மானே வருவாய் மனத்தெழும் உணர்ச்சியை இதழ்வழி தருவாய்

-இலக்கியம்...

ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு கதையாம் ஒன்றினில் ஒன்று விஞ்சிய சுவையாம் எவ்வகைத் தடையும் இடுபவர் இலையாம் எடுத்ததை இரவெலாம் படித்திடும் கலையாம்

-இலக்கியம்...

படித்திடப் படித்திடப் புதியன கிடைக்கும் . பலமுறை முடிப்பினும் விழைவினைக் கொடுக்கும் படித்தபின் நினைப்பினில் இனிமையைப் படைக்கும் பயனுய் இலக்கியப் பரிசிலும் கிடைக்கும்

-இலக்கியம்...

한9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/73&oldid=593944" இலிருந்து மீள்விக்கப்பட்டது