பக்கம்:பாடுங்குயில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் தான் இறைவன்

2 2ー?ール ? ク4

戟 癸

தனக்கென வாழ்பவன் ஒருவன்-அவன் தாங்கிய வடிவம் மானிட உருவம்

-தனக்கென

தனக்கும் பிறர்க்கும் வாழ்பவன் மனிதன்-அவன் தந்ததோர் பிறவியைப் போற்றிடும் இனியன்

-தனக்கென

தனக்கென முயலான் பிறர்க்கென முயல்வான் தன்னையும் பொன்னையும் அவர்க்கெனத்தருவான் மனத்துயர் சூழும் பொழுதினும் அயரான் மதியான் தன்னலம் அவன்தான் இறைவன்

-தனக்கென

நிலத்தினில் தோன்றும் எப்பொரு ளாயினும் நிறைபயன் பிறர் பெறப் பயன்பட லாயின புலப்படும் அறிவோ ஆறுள வாயினும் புரிந்திலன் பொதுநலம் அவளு மானிடன்?

-தனக்கென

7t;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/80&oldid=593952" இலிருந்து மீள்விக்கப்பட்டது