பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாடுங் குயில்கள் புதுமை கூட்டவேண்டுமென்று சி ந் தி ப் பது ம் இவருடைய தலையாய கடமைகளாக இருந்தன. இச்சமயத்தில் மாயூரத்தையடுத்துள்ள தரங்கம் பாடி என்னும் ஊரில் மாவட்ட நீதிபதிப் பதவி ஒன்றுக்கு ஆள் வேண்டியிருந்தது. இப் பதவிக் கென அறுபதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கை யுடைய வேதநாயகரும் விண்ணப்பம் அனுப்பி யிருந்தார். அரசினர் வேதநாயகரையே தேர்ந் தெடுத்து மாவட்ட நீதிபதியாக அமர்த்தினர். அப் பதவியை ஏற்றுக்கொண்ட வேதநாயகர், ஆங்கில மும் தமிழும் அறிந்தவராதலின், நடுநிலைமை பிறழாமல் செம்மையுடன் பணியாற்றிவந்தார். பின்னர், வேதநாயகர் சீகாழி என்னும் ஊருக்கு மாற்றப்பட்டார். திருஞானசம்பந்தர் தோன்றிய அப் பெரும் பதியிலிருந்து இவர் தமது பணியைச் செம்மையுறச் செய்துவந்தார். பொய் வழக்குகள் தமது நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் இவர் மனம் வருந்துவார். வழக்குரைஞர்கள் பனம் ஒன்றையே குறியாகக் கொண்டு, தம் கட்சிக் காரருக்காக, மெய்யைப் பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும் தம் பேச்சுத் திறனுல் மாற்றிமாற்றிப் பேசுவதைக் கண்டபோதெல்லாம் இவர் மனம் புண்படுவதுண்டு. ஏழை மக்கள் வழக்குரைஞர்களே அமர்த்தி வாதாட முடியாமல் துயர்ப்படுவதைக் கண்டு வேதநாயகர் வேதனையடைந்த நாள்கள் பல. அதனல் வழக்குரைஞர்களின் வாதங்களையும் சாட்சி