பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 13 களையும் மட்டும் நம்பி வேதநாயகர் தீர்ப்புக் கூறுவ தில்லை ; பல வழிகளால் உண்மையைத் தெரிந்து கொண்டு நீதி வழங்குவார். நீதி மன்றத்தில்ே நிகழ்கின்ற இந்தக் கொடுமைகளை யெல்லாம் நினைந்துநினைந்து வருந்திப் பாடல்கள் பல பாடிப் பாடித் தம் மன வேதனையை இவர் குறைத்துக் கொள்வார். இப் பெருமகளுர், சமன்செய்து சீர் தூக்கும். கோல்போல் நின்று, நடுநிலை பிறழாமல் தீர்ப்பு வழங்கி வந்தமைக்கு ஒரு-சான்று காணலாம். ஒரு சமயம் வாதியொருவன், இவருடைய நீதி மன்றத்திலே பொய் வழக்கொன்று தொடுத்தான். எதிரியின் பக்கந்தான் உண்மையிருந்தது. நீண்ட நாள் வழக்கு நடந்துவந்தது. கட்சிக்காரர் இருவர் சார்பிலும் எடுத்துக் கூறியவற்றை யெல்லாம் இவர் நன்கு கவனித்துக் கேட்டுக்கொண்டார். தீர்ப்புச் சொல்லும் நாள் நெருங்கியது. வாதி அஞ்சினன்; தன் வழக்கில் உண்மையில்லாததால் தனக்குத் தோல்வி நேருமோ என்று கருதினன். இப்படிக் கருதிய வாதி, ஒருநாள் வேதநாயகருடைய வீட்டிற்கு வந்தான். வேதநாயகர் தம்முடைய விடு தேடி வந்தவனை இன்முகங் காட்டி இனியன கூறி வரவேற்ருர். வந்தவன் உண்மை முழுதும் கூறித் தன் பக்கம் வெற்றியேற்படும்படி தீர்ப்பு வழங்க வேண்டிக் கையூட்டாக (இலஞ்சம்) நூறு ரூபாயும் கொடுத்தான். வேதநாயகருக்கு ஒரே மகிழ்ச்சி; மறுநாள் தீர்ப்பு வழங்குவதற்குத் தக்க சான்று கிடைத்துவிட்டதல்லவா? இவர் பணத்தைப் பா. கு-2