பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாடுங் குயில்கள் வாடியிருந்த புலவர் இருவரும் மீண்டும் கூடி வாழும் வாய்ப்பு நேர்ந்தது. கி. பி. 1860ஆம் ஆண்டு, வேதநாயகர் மயிலாடுதுறை என்னும் செந்தமிழ்ப் பெயர்பூண்ட மாயூரத்திற்கு நீதிப்தியாக மாற்றம் பெற்ருர். இவ்வூரில் இவர் பதின்மூன்ருண்டுகள் பணி புரிந்தார்; ஒய்வு பெற்ற பின்னரும் இங்கேயே தங்கி இறுதிவரை வாழ்ந்தார். இவர் குளத்துாரில் பிறந்தார்; திரிசிரபுரம், தரங்கம்பாடி. சீகாழி முதலிய ஊர்களில் பணி புரிந்தார். ஆயினும் இவர், மாயூரம் வேதநாயகர்’ என்றே அழைக்கப் பெற்ருர். அந்த அளவிற்கு அவ்வூருடன் இவர் ஒன்றிவிட்டார். சீகாழியில் பிரிந்த மகாவித்துவான் மீட்ைசி சுந்தரஞரை இவர் மீண்டும் மாயூரத்தில் சந்தித்துப் பழகிவந்தார். வேதநாயகர் இவ்வூரில் பதவியேற்ற பின்புதான் நீதிநூலின் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது. இவர் மகா வித்துவான் அவர்களின் வேண்டுகோளுக்கினங்கி, மேலும் இருநூறு பாடல் எழுதிச் சேர்த்து, அறுநூறு பாடல்கொண்ட பெரு நூலாக அதனை வெளியிட்டார். நீதியிலும் நேர்மையிலும் வழுவாது ஒழுகி வந்தமையாலும், நற்குன நற்செயல்கள் மிக்கிருந் தமையாலும், நூலாசிரியராக விளங்கியமையாலும் மக்கள் இவரைப் பலவாறு போற்றிவந்தனர். இவர் தாம் மேற்கொண்ட பணியைச் செவ்வனே யாற்றிவந்தார். அதனுல் உயர்நீதிமன்றத்தாரும் இ வ ரி ட ம் நல்லெண்ணம் கொண்டிருந்தனர்.