பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 17 ஒருவர் எவ்வளவு நல்லவராக நடந்துவந்த்ாலும் அழுக்காறு கொண்டவர்களால் தீமை உண்டாவது வழக்கமாகிவிட்டது. வேதநாயகருக்கும் கீழ் மக்கள் சிலரால் துன்பம் வந்து சேர்ந்தது. உயர்நீதி மன்றத்திற்கு நெல்சன் என்பவர் புதிய அதிகாரியாக வந்து சேர்ந்தார். கையூட்டுப் பெறும் கயவர் சிலர் நெல்சனை அணுகி வேத நாயகரைப் பற்றிப் பலவாறு பழி சுமத்தினர். நெல்சன் உயர்பண்புகள் இல்லாதவர்; ஆதலினுல். பிறர் கூறிய கோள் முழுவதையும் நம்பி, வேத நாயகரைப் பற்றித் தவருன கருத்துக்கொண்டிருந் தார்; இவரை எப்படியும் வேலையிலிருந்து நீக்கி' விடுவதென முடிவும் செய்துவிட்டார். ஒரு நாள் மாயூரம் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு உயர்நீதிமன்ற அதிகாரியாகிய நெல்சன் திடீரென ஆய்வு நடத்த வந்துசேர்ந்தார். அப்பொழுது வேதநாயகர் நோய்வாய்ப்பட்டிருந் தமையால், அலுவலகத்திற்கு வர இயலாமல், விட்டில் படுத்திருந்தார். தவருன எண்ணத்துடன் வந்திருந்த நெல்சன், அலுவலகத்தில் சோதனை செய்து, சில குறைகளைக் குறித்துக்கொண்டு சென்ருர்; சென்னைக்குச் சென்றதும் அக் குறை களுக்குக் காரணங் கேட்டு எழுதியிருந்தார். வேதநாயகர் நெல்சனின் செயல் கண்டு மனம் வருந்தினர்; பின்பு அக்குறைகளுக்குத் தகுந்த ாரணங்களை விளக்கி எழுதியனுப்பினர். ஆயினும், நெல்சனுக்கு அக் காரணங்கள் மன நிறைவைத்.