பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரவில்லை. அதனல் வேதநாயகரை வேலையிலிருந்து விலக்குமாறு நெல்சன் மேலிடத்துக்கு লে.ে } அனுப்பிவிட்டார். வேதநாயகர் நேர்மையாக நடந்தவர்; மக்க ளுக்குத் தொண்டுகள் பல புரிந்தவர்; தீய நெறிகளி விருந்து மக்களை நன்னெறிக்குத் திருப்பவேண்டும் என்று அல்லும்பகலும் நினைத்துக்கொண்டேயிருந் தவர்; பதினறு ஆண்டுகள் உண்மை ஊழியம் புரிந்தவர். இவையனைத்தும் மேலிடத்தார்க்கு நன்கு தெரியும். ஆயினும், வெள்ளையராகிய நெல்சன் எழுத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று மேலிடத்தார் எண்ணினர்; அதனல் வேலேயி லிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளுமாறு வேதநாயக ருக்கே நேரில் எழுதிவிட்டனர்; வேதநாயகரின் நேர்மையை நன்கு அறிந்திருந்தமையால் ஒய்வு கால ஊதியம் (Pension) இறுதிக்காலம் வரை இவர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தனர். மேலிடத்திலிருந்து வந்த கடிதத்தைப் படித்து விட்டு, வேதநாயகர் மனத்துக்குள் நகைத்துத் தாம் விலகிக்கொள்வதாக மேலிடத்துக்கு எழுதி அனுப்பி விட்டார். ஒய்வுகால ஊதியம் கொடுக்க வேண்டா என்று நெல்சன் எழுதியும் மேலிடத்தார் அதனே மதிக்கவில்லை; ஒய்வூதியம் இறுதிக் காலம்வரை கொடுத்துவந்தனர். கவிஞன் உள்ளம் என்றும் கட்டுப்பட்டுக்கிடப்பதை விரும்பவே விரும்பாது: விடுதலைப் பறவையாக வாழவே விரும்பும். வேத நாயகரும் சிறந்த கவிஞராதலின், வேலையிலிருந்து