பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாடுங் குயில்கள் ஈ. சீரிய தொண்டுகள் பெண்ணுரிமை, சமயப் பொதுமை ஆகிய கொள்கைகளைப் பொறுத்தவரை இருபதாம் நூற் ருண்டுத் தமிழ்ப் பெரியாராகிய திரு. வி. கலியான சுந்தரனுரை இவருக்கு ஒப்பாகச் சொல்லலாம். சமய அடிப்படையில் எழுந்த கண்மூடிப் பழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதிலும், சர்வ சமய சமரசத்திலும் இராமலிங்க அடிகளுக்கு நிகராக இவரைச் சொல்லலாம். இத்தகைய பெரு மகளுர் ஆற்றிய தொண்டுகள் பலவாயினும் குறிப் பிடத்தக்க தொண்டுகளாக இரண்டைக் கூறலாம். ஒன்று சமுதாயத் தொண்டு; மற்ருென்று மொழித் தொண்டு. சமுதாயத் தொண்டு .ெ பண் ைம ைய வி டு த் து ஆண்மையும், ஆண்மையை விடுத்துப் பெண்மையும் உயர்வு பெற எண்ணிஞல் அச் சமுதாயம் உருப்பட்டு முன்னேற முடியாது. இரண்டு பண்புகளும் சரிநிகர் சமமாக முன்னேறினுல்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். சமுதாயம் முன்னேறக் கல்வி இன்றி யமையாதது. அக் கல்வியை இருபாலாரும் கற்க வேண்டும் என்பது சான்ருேர் முடிபு. பிற்காலத் தில் பெண்களுக்குக் கல்வி வேண்டுவதில்லை என்னும் ஒரு கருத்து நிலவிவந்தது. அதனுல் பெண்கள் நூலறிவு பெற வழியின்றி, அடிமைகள்போல வாழும் நிலை ஏற்பட்டது.