பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 21 இந் நிலையைக் கண்ட வேதநாயகர் மனம் நொந்து பெண்கல்வி பரவ வேண்டுமென்று பாடு பட்டார்; தம் கருத்துகளையெல்லாம் பாடல் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் வெளிப் படுத்தினர். ஆண்மக்களுக்குமட்டும் கற்க வாய்ப் பளித்துப் பெண்மக்களுக்குக் க ல் வி யளி க் க மறுப்பது, நம் உடலில் பாதியை அணிசெய்து, மற்ருெரு பாதியை அணியின்றி விடுவதுபோன்ற தாகும். அஃதாவது சமுதாயத்தில் பாதி அழகு பெறும்; பாதி அழகு பெருமல் போய்விடும் என்னும் கருத்தை இவர் வெளிப்படுத்தினர். பெண் கல்விக்காகவும், பெண் நெறிக்காகவும், பெண்ணின் பெருமைக்காகவும், இவர் ஆற்றிய தொண்டு, பிற் காலத் தமிழகத்திலே முதன்முதலாகச் செய்யப் பெற்ற சமூகச் சீர்திருத்தத் தொண்டாகும்; பெருந் தொண்டும் ஆகும். * சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே இருத்தல் கூடாது என்று வேதநாயகர் கூறுகிருர், பிறக்கும்போதே மகுடத்துடன் பிறந்தவரும் இல்லை; பிறக்கும்போதே ஒடேந்தும் ஏழையாய்ப் பிறந்தவரும் இல்லை. அதனால் மேலோர் கீழோர் எனப் பேசுவது மடமை என்று இவர் பாடுகிரு.ர். மற்ருே.ரிடத்தில் செல்வச் செருக்கை நகைச்சுவை யாகவும் கடுமையாகவும் கண்டிக்கின்ருர்; செல் வர்கள் சிவப்புக்கல், வெள்ளைக்கல், நீலக்கல் என்று சேர்க்கிருர்கள். ஏழையரும் செங்கல், வெண்கல், கருங்கல் என்று சேர்க்கிரு.ர்கள். ஏழைமக்கள் சேர்க்கும் கற்களுக்கே எடை அதிகம்; வலிமையும்