பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாடுங் குயில்கள் அதிகம் என்று பாடுகிருர். இவ்வாறு செல்வத் திால் ஏற்றத்தாழ்வு இருத்தல் கூடாது என்னும் கருத்தை இவர் பல பாடல்களால் விவரிக்கின்ருர். ஒருசமயம் தமிழ்நாட்டிலே _ பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அது, தாது வருடத்திலே ஏற்பட் டமையால், தாது வருடப் பஞ்சம் எனப்பட்டது. அவ்வாண்டில் வானம் பொய்த்தது. மழையே பெய்யவில்லை. மழை பெய்யாமையினல் விளைச்சல் இல்லை. விளைச்சல் இல்லாமையால் உணவில்லை. உணவின்மையால் மக்கள் பெருந் துன்பத்திற் காளானர்கள். எங்கு நோக்கினும் ஒரே அவலநிலை, எவ்வாறு மக்களுக்கு உதவுவது என்று சிந்தித்து வேதநாயகர் ஒரு முடிவுக்கு வந்தார் ; கஞ்சித் தொட்டிகள் வைத்துப் பசியால் வாடிய மக்களுக்குக் கஞ்சி வார்த்து ஒரளவு அவர்களுடைய துன்பத் தைக் களைந்தார்; ஒல்லும் வகையால் அறவினை செய்தார். இஃது இவர் ஆற்றிய சமூகத் தொண்டு களுள் மிகச் சிறந்ததாகும். மொழித்தொண்டு வேதநாயகர் இயல்பாகவே தமிழ்ப்புலமை பெற்றிருந்தார். மகாவித்துவான் மீனுட்சிசுந்தர ஞர், திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர், பாளையங்கோட்டை எச். ஏ. கிருட்டினப் பிள்ளே போன்ற பெருமக்கள் தொடர்பால் மேலும் அப் புலமை வளம் பெற்றது. புலமை முதிரமுதிரத் தமிழ்மொழிப் ப ற் று. இவர் நெஞ்சத்தில் வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. இவர் தமிழைப்