பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் (23. பற்றிக் குறிப்பிடும்பொழுது, நம்மைப் பெற்றதும் மிழ், வளர்த்ததும் தமிழ், நம்மைத் தாலாட்டிச் துரங்க வைத்ததும் தமிழ், வீட்டு மொழியும் தமிழ், நாட்டு மொழியும் தமிழ் என்று கூறுகின்ருர். நம்முள் பலர் தாய்மொழியாம் தமிழைப் பயிலாது பிற மொழிகளில் ஆர்வங்கொண்டு அவற்றையே பயின்று திரியும் போக்கைக் கண்டு, வேதநாயகர் மனம் வெதும்பிப் பேசுகின்ருர்; பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளைப் பயின்று விட்டுத் தாய்மொழியாகிய தமிழைப் பயிலாத வர்கள், மாதா வயிறெரிய மகேசுவர பூசை செய்ப வர்க்கு ஒப்பாவர் என்கிருர்; இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர்களை நாடுகடத்த வேண்டு மென்றுகூடக் கடிந்துரைக்கின்ருர். மொழிப்பற்றின் காரணமாக வேதநாயகர் சிறந்த தமிழ்த் தொண்டுகள் பல புரிந்துள்ளார் ; உரைநடை நூல்கள் எழுதியும், செய்யுள் நூல்கள் எழுதியும், இசைப்பாடல்கள் எழுதியும், சட்டங் களேத் தமிழில் மொழிபெயர்த்தும், இவ்வாறு பல வகையில் தொண்டுகள் ஆற்றியுள்ளார். தமிழ்மொழியில் உரைநடை நூல்களே முதன் முதலில் எழுதிய பெருமை இவரையே சாரும். அதனுல் இவர் உரைநடையின் தந்தை' என்னும் பாராட்டைப் பெற்ருர். இவர் உரைநடையின் தந்தை மட்டும் அல்லர் , புனைகதையின் தந்தையும் ஆவார். முதன்முதலாகப் பிரதாபடமுதலியார்ட் சரித்திரம் என்னும் புனைகதையைத் தமிழில் எழுதி