பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாடுங் குயில்கள் வெளியிட்டார். இது நகைச்சுவை நிறைந்தது ; உயர்ந்த கருத்துகளைக் கொண்டது : இலக்கிய வரிசையில் வைத்து எண்ணத்தக்கது. இவருடைய புனைகதைகளைத் தாய் படிக்க மகன் கேட்கலாம் ; அண்ணன் படிக்கத் தங்கை கேட்கலாம் ; தந்தை படிக்கத் தாய் கேட்கலாம் ; குடும்பமே கலந்து படிக்கத்தக்க அவ்வளவு சிறப்புடையது என்று பன்மொழிப் புலவர் புகழ்வர். இவர் சுகுணசுந்தரி சரித்திரம் என்னும் புனைகதை நூலும் எழுதி யுள்ளார். வேதநாயகர், நீ தி நூ ல்," சித்தாந்த சங்கிரகம், பெண்மதி மாலை,” 'திருவருள் அந்தாதி முதலிய சிறந்த செய்யுள் நூல்களும், சர்வ சமய சமரசக் கீர்த்தனே' என்னும் இசைப்பாடல் நூலும் எழுதி வெளியிட்டார். o அக் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிருந்தமை யால் சட்டங்கள் ஆங்கில மொழியில் இருந்தன. அதல்ை தமிழ் மக்கள் படும் இன்னல்களையெல்லாம் நீதிபதியாக இருந்த வேதநாயகர் நன்கு உணர்ந் திருந்தார். ஒரு நீதிமன்றத்தில் கட்சிக்காரர்களும் தமிழராக இருந்து, வழக்குரைஞர்களும் நீதிபதி களும் தமிழ் பேசக்கூடியவர்களாக இருந்தால், வழக்கு ஏன் தமிழிலேயே நடத்தல்கடாது ? என்று இவர் அக் காலத்திலேயே உரிமைக் குரல் கொடுத்தார். "ஆங்கில ஆட்சிமுறை மாறித் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி தலையெடுக்க வேண்டும்; அது தழைத்